UPDATED : ஜூலை 20, 2026 10:24 PM
ADDED : ஜூலை 20, 2026 10:14 PM
அ நிறம் | அளவு
திரு.வி.க., நகர்:விளையாட்டு திடலை பிரிக்கும் பணிக்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, தற்காலிகமாக பணியை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திரு.வி.க., நகர் மண்டலத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், அருந்ததியர் நகர் மாநகராட்சி விளையாட்டு திடலில், கால்பந்து, டென்னிஸ் மைதானம் மற்றும் பூங்கா அமைக்கும் பணி நடந்து வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி வாலிபர்கள், அனைத்து விளையாட்டுகளுக்கும் பயன்படும் பொதுத் திடலாக மாற்றக்கோரி மனு அளித்ததுடன், நேற்று முன்தினம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து, நேற்று திடலை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், அனைத்து வகை விளையாட்டுகளுக்கும் ஏற்ற வகையில் திடல் அமைக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால், பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
