UPDATED : அக் 13, 2026 02:34 AM
ADDED : அக் 13, 2026 02:28 AM
அ நிறம் | அளவு
பள்ளிக்கரணை, விவேகானந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் கழிவுநீர் அடைப்பு இருப்பதாக, வாடகைக்கு குடியிருப்போர் கூறியுள்ளனர். இதையடுத்து அவர், வீட்டின் அருகில் உள்ள ராஜேஷ், 49, என்பவரிடம், இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவரும், பிளம்பரான கேசவன், 29, என்பவரும் சேர்ந்து, கழிவுநீர் தொட்டியை, நேற்று திறந்தனர்.
அப்போது விஷவாயு தாக்கியதில் ராஜேஷ் மயங்கி தொட்டியில் விழுந்தார். அவரை மேலே துாக்கியபோது கேசவன் மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டனர். எனினும், சம்பவ இடத்திலேயே கேசவன் உயிரிழந்தார். ராஜேஷ், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
