/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்தில் படுகாயமடைந்த பிளஸ் 1 மாணவர் பலி
/
விபத்தில் படுகாயமடைந்த பிளஸ் 1 மாணவர் பலி
ADDED : ஜன 29, 2025 12:16 AM
ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் அருகே, காந்துார் கிராமம் படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜி, 16. இவர், மதுரமங்கலம் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
கடந்த 16ம் தேதி, சகோதரர் லோகேஷ் என்பவருடன் பஜாஜ் சிடி100' இருசக்கர வாகனத்தில் சுங்குவார்சத்திரத்தில் இருந்து காந்துார் சென்றார். வாகனத்தை ராஜி ஓட்டினார்.
மொளச்சூர் அருகே வந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி, இருவரும் கீழே விழுந்தனர். இதில், ராஜியின் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது; அதிர்ஷ்டவசமாக லோகேஷ் லேசான காயமடைந்தார்.
அவ்வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ராஜி உயிரிழந்தார். சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

