/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் பஸ் மோதி பிளஸ் 2 மாணவி பலி
/
தனியார் பஸ் மோதி பிளஸ் 2 மாணவி பலி
ADDED : டிச 08, 2024 12:18 AM

சாஸ்திரிநகர், டிச. 8--
மேற்கு சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் சாலையைச் சேர்ந்தவர் மஞ்சுளா, 17. கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் நித்யா, 27. இருவரும், கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர்.
நேற்று மாலை, இருவரும் சைக்கிளில் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்று கொண்டிருந்தனர். பெசன்ட் அவென்யூ சாலையில் சென்றபோது, சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்வதற்காக மார்த்தாண்டத்தைச் சேர்ந்த 32 ஆசிரியர்களை ஏற்றி சென்ற தனியார் பேருந்து, சைக்கிள் மீது மோதியது.
இதில், இருவரும் கீழே விழுந்தனர். சைக்கிளை ஓட்டி சென்ற மாணவி மஞ்சுளாவின் தலை மீது பேருந்தின் சக்கரம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த நித்யா, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பேருந்து ஓட்டுனரான திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ராஜாராம், 38, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.