/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடை பூட்டை உடைத்து திருட்டு 'போக்சோ' குற்றவாளி கைது
/
கடை பூட்டை உடைத்து திருட்டு 'போக்சோ' குற்றவாளி கைது
கடை பூட்டை உடைத்து திருட்டு 'போக்சோ' குற்றவாளி கைது
கடை பூட்டை உடைத்து திருட்டு 'போக்சோ' குற்றவாளி கைது
ADDED : ஜூலை 13, 2025 12:11 AM
சென்னை, :பல்பொருள் அங்காடியின் பூட்டை கட்டிங் இயந்திரத்தால் உடைத்து, கல்லாவில் வைத்திருந்த 1.41 லட்சம் ரூபாயை திருடிய 'போக்சோ' குற்றவாளி, போலீசார் நேற்று கைது செய்தனர்.
வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லஷ்மிகுமார், 59. இவர், ஆதம்பாக்கம் - மேடவாக்கம் பிரதான சாலையில் உள்ள பல்பொருள் அங்காடியில், மேலாளராக பணிபுரிகிறார்.
இவர், கடந்த 9ம் தேதி இரவு, பல்பொருள் அங்காடியை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின், மறுநாள் காலையில் அங்காடியை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் வைத்திருந்த 1.41 லட்சம் ரூபாயை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக, லஷ்மிகுமார் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தைச் சேர்ந்த ராஜி மாரிமுத்து தினேஷ், 27, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
அவரிடமிருந்து, 1.31 லட்சம் ரூபாய் மற்றும் கட்டிங் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது, திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் காவல் நிலையத்தில், போக்சோ வழக்கு உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

