/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவியிடம் சில்மிஷம் வாலிபருக்கு 'போக்சோ'
/
மாணவியிடம் சில்மிஷம் வாலிபருக்கு 'போக்சோ'
ADDED : மே 20, 2025 01:42 AM
வில்லிவாக்கம், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவி ஒருவர், நேற்று மாலை கோவிலுக்கு சென்று, வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த வட மாநில வாலிபர் ஒருவர், கல்லுாரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அந்த பெண் சத்தம் போடவே, பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, வில்லிவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் ஜமாத், 21, என்பதும், மதுபோதையில் மாணவியிடம் அத்துமீறியதும் தெரிய வந்தது.
இது குறித்து விசாரித்த வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து சுனில் ஜமாதை கைது செய்தனர்.