/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் வாங்க போலீசார் அலைக்கழிப்பு எலி மருந்து சாப்பிட்ட வாலிபரால் பரபரப்பு

ADDED : ஏப் 23, 2025 12:30 AM
எம்.கே.பி.நகர், சென்னை, எருக்கஞ்சேரி, அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 28; ஆறு மாதங்களாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு இரு மாதங்களாக சந்தோஷ்குமாரிடம் கூறி வருகிறார்.
நேற்று முன்தினம் சந்தோஷ்குமார் அவரது மனைவி தனலட்சுமியிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறி அவதுாறாக பேசியுள்ளார்.
இதனால் சந்தோஷ்குமார், மனைவி தனலட்சுமியுடன், எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். போலீசார், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
போலீசார் அங்கும்மிங்கும் போக சொன்னதால் மன உளச்சலுக்கு ஆளான சந்தோஷ்குமார், எலி மருந்து உட்கொண்ட நிலையில், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்றார்.
அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர்களிடம் சந்தோஷ்குமார், தான் எலி மருந்து உட்கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து காவலர்கள் 108 ஆம்புலன்ஸ் வாயிலாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.