ADDED : மார் 25, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை லிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற்ற, விளையாட்டு வீரர்களுக்கு, அரசு மற்றும் பொது துறை நிறுவனங்களில் பணியில் சேர, 3 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், காவல் துறையில், இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேர, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 27 பேர் அடங்கிய பட்டியலை, சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்து உள்ளது.
அவர்களில், 22 பேருக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், நேற்று உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.