/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற போலீஸ் விசாரணை துவக்கம்
/
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற போலீஸ் விசாரணை துவக்கம்
ADDED : ஏப் 23, 2025 12:46 AM
சென்னை,காவலர் குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றும் பணிக்காக, போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
சென்னை பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் கச்சேரிசாலை, பாபநாசம் சிவன் சாலை, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் காவலர் குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு உள்ளன.
மின் திருட்டும் நடக்கிறது. ஆவின் பால் பாக்கெட்கூட அதிக விலைக்கு விற்கப்படுகிறது என, போலீசார் புகார் தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக, நம் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து, சென்னை மாநகர போலீசார், தமிழக காவலர் வீட்டு வசதி கழகம், டி.ஜி.பி. அலுவலக போலீசார், காவலர் குடியிருப்புகளுக்குச் சென்று, ஆக்கிரமிப்பு கடைகள் குறித்து, நேற்று விசாரணை நடத்தி உள்ளனர்.
வீடியோ மற்றும் படங்கள் எடுத்தும், உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். கடைகளை அகற்றுவதற்கான பணி துவங்கி உள்ளது. அதற்காக எத்தனை ஆண்டுகள் இந்த கடைகள் உள்ளன. இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
***

