/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளம் பெண்ணுக்கு பாதுகாப்பு ஆணை வழங்கிய போலீஸ்
/
இளம் பெண்ணுக்கு பாதுகாப்பு ஆணை வழங்கிய போலீஸ்
ADDED : செப் 18, 2025 06:47 PM
சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, 21 வயது பெண், 23 வயது வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, அண்ணாசாலை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, 23 வயது வாலிபரை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, வாலிபர் மீண்டும் தொல்லை கொடுப்பதை தடுக்கும் வகையில், பாதுகாப்பு ஆணையை பெற்று தர, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன்படி, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் பாதிப்பு ஏற்படுத்திய இளைஞர் என, இருதரப்பினரிடமும், மயிலாப்பூர் ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தினர்.
பின், 'பெண்ணிற்கு எந்த வகையிலும் தொல்லை தர மாட்டேன்' என, பிரமாண பத்திரம் மூலமாக, வாலிபர் உத்தரவாதம் அளித்தார்.
இது தொடர்பாக, ஆர்.டி.ஓ., பிறப்பித்த பாதுகாப்பு ஆணை உத்தரவு, போலீசார் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்கப்பட்டது.
பாதுகாப்பு உத்தரவு ஆணையை மீறினால், வாலிபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.