/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூவம் ஆற்று தரைப்பாலத்தில் போலீசார் தயவில் வாகன நிறுத்தம்
/
கூவம் ஆற்று தரைப்பாலத்தில் போலீசார் தயவில் வாகன நிறுத்தம்
கூவம் ஆற்று தரைப்பாலத்தில் போலீசார் தயவில் வாகன நிறுத்தம்
கூவம் ஆற்று தரைப்பாலத்தில் போலீசார் தயவில் வாகன நிறுத்தம்
ADDED : மே 02, 2025 12:11 AM

சூளைமேடு, சூளைமேடு சிக்னலில் இருந்து, சேத்துபட்டு, ஹாரிங்டன் சாலையை நோக்கி செல்லும் வழியில், சூளைமேடு நமச்சிவாயபுரத்தில், கூவம் ஆற்றின் மேல் இணைப்பு பாலம் உள்ளது.
இந்த பாலத்தின் இருபுறங்களும், அப்பகுதிகளில் வசிப்போர், ஆட்டோ மற்றும் கனரக வாகனங்களை, 'பார்க்கிங்' போல் அத்துமீறி நிறுத்தி செல்கின்றனர். இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது :
போலீசார், பாலத்தை வாடகை விட்டதுபோல், இணைப்பு பாலத்தில் பல ஆண்டுகளாகவே அத்துமீறி வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அத்துமட்டுமின்றி இரவு நேரத்தில் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சூளைமேடு சிக்னல் அருகில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு உடந்தையாக, போலீசார் செயல்படுகின்றனர். பாலத்தில் ஆக்கிரமித்து நிறுத்தும் வாகன உரிமையாளர்கள் மீது, உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

