/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில் உண்டியல் 'ஆட்டை' பெண்ணுக்கு போலீஸ் வலை
/
கோவில் உண்டியல் 'ஆட்டை' பெண்ணுக்கு போலீஸ் வலை
ADDED : நவ 09, 2024 12:22 AM
கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம், டெய்லர்ஸ் சாலையில், தபால் துறை ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்பின் மத்தியில், 1993ம் ஆண்டு முதல், அப்பகுதிவாசிகளின் பராமரிப்பில் விநாயகர் கோவில் உள்ளது.
வழக்கம்போல, இக்கோவிலின் பூஜாரி நேற்று காலை 6:00 மணியளவில் பூஜை செய்ய வந்துள்ளார். அப்போது, கோவிலின் முன் வைக்கப்பட்டிருந்த, 1 அடி உயரமுள்ள சில்வர் உண்டியல், மர்மநபர்களால் அறுத்து, திருடிச் செல்லப்பட்டது தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள், மற்றொரு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவு 2:00 மணியளவில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர், கையில் உண்டியலுடன் செல்வது பதிவாகியிருந்தது.
சம்பவம் குறித்து, நேற்று காலை கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.இது குறித்து குடியிருப்பு மக்கள் கூறுகையில், ''கடந்த, நான்கு மாதங்களுக்கு முன், இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. திருடப்பட்ட உண்டியிலில் 20,000 ரூபாய்க்கு மேல் இருக்கலாம்'' என்றனர்.