/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருத்துவமனை 5வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண் மீட்பு போலீசாருக்கு குவியும் பாராட்டு

ADDED : ஏப் 19, 2025 11:52 PM

சென்னை, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த, 47 வயது பெண் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்று காலை, திடீரென அப்பெண் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றார். மாடியில் இருந்து குதிக்க தயாராக அந்த பெண் நின்று கொண்டிருந்தார். அவ்வழியாக சென்றவர்கள், இதை பார்த்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோடம்பாக்கம் போக்குவரத்து தலைமை காவலர் தேவராஜ், காவலர் கார்த்திக் ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாடியில் இருந்து குதிக்க இநரத பெண்ணை போக்குவரத்து தலைமைக் காவலர் பத்திரமாக மீட்டு, செவிலியர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
சிறப்பாக செயல்பட்டு, தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போக்குவரத்து போலீசார் இருவரையும், போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.