/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோர்ட்டில் போலி வைரக்கல் சமர்பித்த போலீசார் ரூ.20 கோடி வைரக்கல் பதுக்கல்? குறைதீர் முகாமில் கமிஷனரிடம் வியாபாரி புகார்
/
கோர்ட்டில் போலி வைரக்கல் சமர்பித்த போலீசார் ரூ.20 கோடி வைரக்கல் பதுக்கல்? குறைதீர் முகாமில் கமிஷனரிடம் வியாபாரி புகார்
கோர்ட்டில் போலி வைரக்கல் சமர்பித்த போலீசார் ரூ.20 கோடி வைரக்கல் பதுக்கல்? குறைதீர் முகாமில் கமிஷனரிடம் வியாபாரி புகார்
கோர்ட்டில் போலி வைரக்கல் சமர்பித்த போலீசார் ரூ.20 கோடி வைரக்கல் பதுக்கல்? குறைதீர் முகாமில் கமிஷனரிடம் வியாபாரி புகார்
ADDED : மே 16, 2025 11:55 PM

சென்னை :'வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, 20 கோடி மதிப்பிலான வைரக் கல்லிற்கு பதிலாக, அதேபோல் தயாரித்த போலி வைர கல்லை, போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்' என, வைர வியாபாரி, போலீஸ் கமிஷனரிடம், பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பழமையான தன் வைரக்கல்லை மீட்டுத்தருவதோடு, மோசடி செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
அண்ணாநகர், டவர் வியூ காலனி, 17 வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 56 ; வைர நகை வியாபாரி.
சில தினங்களுக்கு முன் சந்திரசேகர் தன்னிடம் உள்ள, 20 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகையை விற்பதற்காக, வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றார்.
அப்போது, அங்கு வைர நகையை வாங்க வந்தவர்கள், வியாபாரியை கட்டிப்போட்டு, நகையை திருடி தப்பினர்.
சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்ற ஹோட்டல் ஊழியர்கள், கட்டப்பட்ட நிலையில் இருந்த சந்திரசேகரை மீட்டனர்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வடபழனி போலீசார், வைர நகையை கொள்ளையடித்துச் சென்ற, திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் லாயட், 34, வளசரவாக்கத்தைச் சேர்ந்த, விஜய், 24, திருவேற்காட்டைச் சேர்ந்த ரதீஷ், 28, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அருண் பாண்டியராஜன், 35 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். வைர நகையை பறிமுதல் செய்தனர்.
வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வைரக் கல்லை போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஆனால், நீதிமன்றத்தில் ஒப்படைத்த வைர கல் ஒரிஜினல் இல்லை என்பதை அறிந்த வியாபாரி சந்திரசேகர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில், கமிஷனர் அருணிடம் புகார் அளித்தார்.
புகாரில் கூறியிருப்பதாவது:
போலீசார் இம்மாதம் 8 ம்தேதி, நீதிமன்றத்தில் வைரக் கல்லை ஒப்படைத்தனர். அது, ஒரிஜினல் இல்லை. அதேபோல், போலீசார் போலியாக தயாரித்த வைர கல்.
இந்த வைர கல் போலியானது என்பதை, நீதிபதி அங்குள்ள மதிப்பீட்டாளர்கள் வாயிலாக அறிந்துக் கொண்டார்.
மேலும், ஏற்கனவே மதிப்பீட்டாளர்கள் சமர்பித்த ஆவணத்தை வைத்து, சரிபார்க்க உத்தரவிட்டார்.
எனக்கு சொந்தமான பழமையான வைர கல்லை மீட்டு தாருங்கள். மோசடியில் ஈடுபட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, 'வியாபாரி சந்திரசேகர் அளித்த புகார் முற்றிலும் பொய்யானது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம்' என்றார்.