/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'யு டியூபர்' சவுக்கு சங்கரின் 'ஆபீஸ்' திறக்க முடியாமல் திரும்பிய போலீஸ்
/
'யு டியூபர்' சவுக்கு சங்கரின் 'ஆபீஸ்' திறக்க முடியாமல் திரும்பிய போலீஸ்
'யு டியூபர்' சவுக்கு சங்கரின் 'ஆபீஸ்' திறக்க முடியாமல் திரும்பிய போலீஸ்
'யு டியூபர்' சவுக்கு சங்கரின் 'ஆபீஸ்' திறக்க முடியாமல் திரும்பிய போலீஸ்
ADDED : டிச 16, 2025 04:59 AM

ஆதம்பாக்கம்: 'யு டியூபர்' சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரின் அலுவலகத்தை சோதனையிட வந்த போலீசார், திறக்க முடியாததால் திரும்பி சென்றனர்.
தி.மு.க., அரசையும், காவல் துறை அதிகாரிகளையும் விமர்சித்து, பிரபல 'யுடியூபர்' சவுக்கு சங்கர் பதிவு வெளியிட்டு வந்தார். இந்நிலையில், தன்னை மிரட்டி பணம் பறித்ததாக நந்தனத்தில் உள்ள, 'நோ-நேம்' மதுக்கூட உரிமையாளர் ஹரிச்சந்திரன் என்பவர் புகார் அளித்திருந்தார்.
விசாரித்த சைதாப்பேட்டை போலீசார், கடந்த 13ம் தேதி பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கதவை உடைத்து, சவுக்கு சங்கரை கைது செய்தனர். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகர், 3வது தெருவில் உள்ள, 'சவுக்கு மீடியா' அலுவலகத்தில் சோதனையிட, மீனம்பாக்கம் சரக உதவி கமிஷனர் முகேஷ் ஜெயகுமார் தலைமையில், சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் இளங்கனி, போலீசார், ஆலந்துார் கிராம நிர்வாக அலுவலர் முத்தரசன் ஆகியோர் சென்றனர்.
அந்த கட்டட உரிமையாளர் லட்சுமிகாந்தன் என்பவரிடம், சோதனைக்கான நீதிமன்ற உத்தரவை அளித்து, அலுவலகத்தை சோதனை செய்ய சென்றனர். ஆனால், அலுவலகம் முழுதும் கண்ணாடியாலான கதவுளைக் கொண்டு பூட்டப்பட்டு இருந்தது.
அலுவலகத்தில் ஊழியர்கள் தவிர வேறு யாரும் திறக்க முடியாதபடி, 'செக்யூரிட்டி பாஸ்வேர்ட்' போடப்பட்டிருந்தது. இதனால், கதவை திறக்க முடியாமல், போலீசார் திரும்பிச் சென்றனர்.

