/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏட்டு மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் முற்றுகை
/
ஏட்டு மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் முற்றுகை
ஏட்டு மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் முற்றுகை
ஏட்டு மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் முற்றுகை
ADDED : ஆக 29, 2025 12:27 AM

வேளச்சேரி :போலீஸ் ஏட்டு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சட்டக் கல்லுாரி மாணவர்கள், வேளச்சேரி காவல் நிலையத்தை, நேற்று மாலை முற்றுகையிட்டனர்.
கடந்த 27ம் தேதி நள்ளிரவு, வேளச்சேரி- - தரமணி சாலையில் உள்ள ஒரு டீ கடையில், சில சட்டக்கல்லுாரி மாணவர்கள் கூடி நின்றனர். அப்போது, அதே பகுதியில், வேளச்சேரி காவல் நிலைய ஏட்டு சம்பத், 47, ரோந்து பணியில் இருந்தார்.
அவர், அங்கு கூடி நின்றவர்களிடம் விசாரித்துள்ளார். இதில், கரிகால்வளவன் என்ற மாணவருக்கும், ஏட்டு சம்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசி கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை, 20க்கும் மேற்பட்ட சட்டக் கல்லுாரி மாணவர்கள், வேளச்சேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஏட்டு சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, சாலை மறியல் செய்தனர்.
இதையடுத்து, காவல் உயர் அதிகாரிகள், மாணவர்களை காவல் நிலையம் அழைத்து, ஒரு மணி நேரம் நடந்த சமாதான பேச்சுக்கு பின், அனைவரும் கலைந்து சென்றனர்.

