/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிக ஒலி எழுப்பிய 'சைலன்சர்' வாலிபருக்கு போலீசார் ௶'பாடம்'
/
அதிக ஒலி எழுப்பிய 'சைலன்சர்' வாலிபருக்கு போலீசார் ௶'பாடம்'
அதிக ஒலி எழுப்பிய 'சைலன்சர்' வாலிபருக்கு போலீசார் ௶'பாடம்'
அதிக ஒலி எழுப்பிய 'சைலன்சர்' வாலிபருக்கு போலீசார் ௶'பாடம்'
ADDED : ஜன 23, 2025 11:56 PM
திருவொற்றியூர், திருவொற்றியூரில், டூ - வீலர் சைலன்சரில், அதிக ஒலி எழுப்பியபடி சாலையில் பயணித்த வாலிபரை பிடித்த போக்குவரத்து போலீசார், மெக்கானிக் கடைக்கு அழைத்து சென்று, புதிய சைலன்சரை மாற்ற செய்தனர்.
திருவொற்றியூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சாமுவேல் ரஞ்சித் சிங், காவலர் சிவா ஆகியோர், நேற்று முன்தினம் மாலை, எண்ணுார் விரைவு சாலை, எஸ்.பி.ஐ., காலனி பகுதியில், பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 'பல்சர் 200' ரக டூ - வீலரில் வாலிபர் ஒருவர், அதிக சத்தம் எழுப்பக் கூடிய சைலன்சரை வேகமாக ஒலித்தபடி, சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார். போக்குவரத்து போலீசார், வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் பிடிப்பட்ட நபர், கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகரைச் சேர்ந்த அருண், 22, என்பது தெரியவந்தது.
பின், டூ - வீலரை பிடித்து வந்து, எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள, மெக்கானிக் கடையில், அதிக ஒலி எழுப்பக் கூடிய சைலன்சரை மாற்றி, புதிய சைலன்சரை பொருத்தச் செய்தனர். தொடர்ந்து, அதிக ஒலி எழுப்பிய குற்றத்திற்காக, வழக்கும் பதியப்பட்டது.
சென்னையில் கடந்த ஆண்டு, அதிக ஒலி எழுப்பும் வகையில் இருசக்கர வாகனத்தில் சைலன்சர் அமைத்திருந்தது தொடர்பாக, 2,312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

