/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காலணியில் சாவியை மறைத்து வைக்காதீர் திருட்டை தவிர்க்க போலீசார் எச்சரிக்கை
/
காலணியில் சாவியை மறைத்து வைக்காதீர் திருட்டை தவிர்க்க போலீசார் எச்சரிக்கை
காலணியில் சாவியை மறைத்து வைக்காதீர் திருட்டை தவிர்க்க போலீசார் எச்சரிக்கை
காலணியில் சாவியை மறைத்து வைக்காதீர் திருட்டை தவிர்க்க போலீசார் எச்சரிக்கை
ADDED : ஏப் 23, 2025 12:16 AM

கண்ணகி நகர், ஓ.எம்.ஆர்., - பி.டி.சி., சந்திப்பு, பல்லவன் குடியிருப்பை சேர்ந்தவர் டில்லிபாபு, 33. ஐ.டி., ஊழியர். கடந்த 9ம் தேதி, இவர் வீட்டில், 19 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது.
கண்ணகி நகர் போலீசார் விசாரணையில், கண்ணகி நகரை சேர்ந்த சுமதி, 19, ரம்யா, 21, கஸ்துாரி, 23, கலைவாணி, 25, மீனா, 30, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், நேற்று சோழிங்கநல்லுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, 25 சவரன் பறிமுதல் செய்யப்பட்டது.
கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:
சுமதி, ரம்யா, கஸ்துாரி, கலைவாணி ஆகியோர் உடன்பிறந்த சகோதரிகள். மீனா நெருங்கிய உறவினர்.
ஓ.எம்.ஆரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் செல்லும் சுமதி, கதவு திறந்திருக்கும் வீடுகள், சாவி வைக்கப்படும் இடங்களை நோட்டமிடுவார்.
யாராவது கேட்டால், வேலை கேட்டு வந்தேன் என கூறுவார். பெரும்பாலான வீடுகளில், சாவியை காலணிகள், ஜன்னல் ஓரம் போன்ற இடங்களில் வைத்து செல்வர்.
அதுபோன்ற வீடுகளைத் தான் சுமதி குறி வைப்பார். சம்பவத்தன்று, அதேபோல் சாவியை எடுத்து திறந்து, டில்லிபாபு உள்ளிட்ட இரண்டு பேர் வீடுகளில் நகை திருடியுள்ளார்.
திருடிய நகையை விற்பனை மற்றும் அடமானம் வைத்து கிடைக்கும் பணத்தை, அவர்கள் ஐந்து பேரும் பங்கிட்டு, ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர்.
பல வீடுகளில் ஒரு சாவி மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதையும் காலணிக்குள் மறைத்து வைத்து செல்கின்றனர்.
நான்கு சாவி கொண்ட பூட்டு பயன்படுத்தினால், வீட்டில் உள்ள அனைவரிடமும் சாவி இருக்கும். அதனால், சாவியை மறைத்து வைத்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. அப்போது தான் இதுபோன்ற திருட்டை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

