ADDED : மே 10, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்,
வண்ணாரப்பேட்டை, நைனியப்பன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், 35; போக்குவரத்து காவலர். இவர், நேற்று முன்தினம் இரவு, மணலி விரைவு சாலை - சத்தியமூர்த்தி நகர் சந்திப்பில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, தாறுமாறாக வந்த ஆட்டோவை நிறுத்த சதீஷ் முயன்றுள்ளார். ஆனால், ஓட்டுனர் ஆட்டோவை நிறுத்தாமல், வேகமாக ஓட்டி வந்து, சதீஷ் மீது மோதி விட்டு தப்பி விட்டார்.
இதில், சதீஷுக்கு, கால் எலும்பு முறிவு, கை மற்றும் முகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தோர் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து விசாரித்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சதீஷ் மீது மோதிய ஆட்டோ ஓட்டுனரான, ஜோதி நகரைச் சேர்ந்த சுரேஷ், 34, என்பவரை, நேற்று கைது செய்தனர்.