sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எஸ்.ஐ.,யை தாக்கிய போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'

/

எஸ்.ஐ.,யை தாக்கிய போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'

எஸ்.ஐ.,யை தாக்கிய போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'

எஸ்.ஐ.,யை தாக்கிய போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'


ADDED : செப் 26, 2025 02:30 AM

Google News

ADDED : செப் 26, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூக்கடை, போக்குவரத்து சப் - இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த போலீஸ்காரர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருப்பதி திருக்குடையை, 22ம் தேதி, பூக்கடை பகுதியில் இருந்து, திருமலைக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில், பூக்கடை போக்குவரத்து போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சப் - இன்ஸ்பெக்டர் தர்மன், உடன் பணியாற்றிய போலீஸ்காரர் மணிகண்டன் என்பவரை, பெயர் சொல்லி அழைத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த காவலர் மணிகண்டன், சப் - இன்ஸ்பெக்டர் தர்மன் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதில் நிலைகுலைந்த தர்மன், காது வலியுடன், ராஜிவ்காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து, பூக்கடை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தினேஷ் விசாரணை நடத்தினார். பின், உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, சப் - இன்ஸ்பெக்டரை தாக்கிய போக்குவரத்து போலீஸ்காரர் மணிகண்டன், நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us