/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடில் பொங்கல் சிறப்பு சந்தை
/
கோயம்பேடில் பொங்கல் சிறப்பு சந்தை
ADDED : ஜன 11, 2025 12:19 AM

கோயம்பேடு,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு சந்தையில் அங்காடி நிர்வாக குழு சார்பில் சிறப்பு சந்தை நடத்தப்படுவது வழக்கம்.
இங்கு, கரும்பு, வாழைக் கன்று, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து, வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
இந்த நிலையில், கடந்தாண்டு அங்காடி நிர்வாக குழுவே, சிறப்பு சந்தையை நடத்தி வருகிறது. அந்தவகையில், கோயம்பேடு சந்தை 'ஏ' சாலையில் 6.5 ஏக்கர் நிலத்தில், அங்காடி நிர்வாக குழு சார்பில், நேற்று முன்தினம் நள்ளிரவுமுதல் சிறப்பு சந்தை துவக்கப்பட்டது.
இந்த சிறப்பு சந்தை, வரும் 17ம் தேதி வரை செயல்படும். நேற்று முன்தினம் இரவு முதல் கரும்பு வரத்து துவங்கியுள்ளது. 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

