/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை நிறைவு
/
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை நிறைவு
ADDED : ஆக 27, 2025 12:17 AM
சென்னை, 'பூந்தமல்லி - போரூர் இடையே பாதுகாப்பு சான்றிதழுக்கான, மெட்ரோ ரயில் சோதனை நிறைவு செய்யப்பட்டுள்ளது' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி தடத்தில், 26 கி.மீ., மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளன.
இதில், பூந்தமல்லி - போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை, 10 கி.மீ., துாரம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இந்த தடத்தில், பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான மெட்ரோ ரயில் சோதனையை, இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு, கடந்த 16ம் தேதி துவங்கியது. சோதனை நேற்றுடன் நிறைவடைந்துள்ளன.
மணிக்கு 90 கி.மீ., வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு, பயண வசதி, தொழில்நுட்ப ரீதியான செயல்பாடுகள் உறுதி செய்யப்பட்டன.
இந்த ஆண்டு இறுதிக்குள், பூந்தமல்லி பைபாஸ் - போரூர் இடையே மேம்பாலத்தில், மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
***

