/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரும் 30ல் அஞ்சல் குறைதீர் முகாம்
/
வரும் 30ல் அஞ்சல் குறைதீர் முகாம்
ADDED : டிச 25, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம், தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும், 30ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.
அஞ்சலக பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைகள் குறித்த புகார்களை, சாதாரண, பதிவுத் தபாலில் வரும்29ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
புகார் மனு அடங்கிய உறையில், மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு, சென்னை நகர தென்மண்டல அலுவலகம் என, குறிப்பிட வேண்டும் என, அஞ்சல்துறை அறிவித்துள்ளது.

