/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.3 கோடியை திருப்பி தராத கட்டுமான நிறுவனத்துக்கு 'வாரன்ட்' : ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு

UPDATED : டிச 25, 2025 08:01 AM
ADDED : டிச 25, 2025 05:10 AM
சென்னை: வீடு ஒப்படைக்க தாமதமான வழக்கில், 3.04 கோடி ரூபாயை திருப்பித்தராத கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக 'வாரன்ட்' பிற ப்பிக்க, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அண்ணா நகரில் 'ஓசோன் புராஜக்ட்ஸ்' நிறுவனம், அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை கட்டி வருகிறது.
இதில் வீடு வாங்க, குலோத்துங்கன், ஷியாமோஸ்ரீ குலோத்துங்கன் ஆகியோர், 3.04 கோடி ரூபாய் செலுத்தினர். இதற்கான ஒப்பந்தப்படி, குறிப்பிட்ட காலத்தில் கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. இதனால், பணத்தை திரும்ப கேட்டு குலோத்துங்கன் குடும்பத்தினர், ரியல் எஸ்டேட் ஆணையத்தில முறையிட்டனர்.
விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணையம், மனுதாரர் செலுத்திய, 3.04 கோடி ரூபாயை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும் என, 2023ல் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை கட்டுமான நிறுவனம் செயல்படுத்தவில்லை.
இது குறித்து மனுதாரர், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மீண்டும் புகார் அளித்தார். இந்த மனு தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினர்கள், எல்.சுப்ரமணியன்,எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தர வு:
ரியல் எஸ்டேட் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டபடி, மனுதாரருக்கு, கட்டுமா ன நிறுவனம், 3.04 கோடி ரூபாயை திருப்பித்தரவில்லை என்பது உறுதியாகிறது.
எனவே, அந்நிறுவனத்துக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து, வருவாய் மீட்பு சட்டப்படி பணத்தை வசூலிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் சொத்துகளை முடக்கி, இதற்கான நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.