/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டிவி' நடிகர் மீது நடிகை கமிஷனர் அலுவலகத்தில் புகார்
/
'டிவி' நடிகர் மீது நடிகை கமிஷனர் அலுவலகத்தில் புகார்
'டிவி' நடிகர் மீது நடிகை கமிஷனர் அலுவலகத்தில் புகார்
'டிவி' நடிகர் மீது நடிகை கமிஷனர் அலுவலகத்தில் புகார்
ADDED : செப் 09, 2025 01:16 AM
சென்னை,திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி ஐந்து ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றியதாக, 'டிவி' நடிகர் மீது, கமிஷனர் அலுவலகத்தில் நடிகை புகார் அளித்துள்ளார்.
வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷு லிசா. இவர் 'டிவி' நடிகையாக உள்ளார். நேற்று காலை கமிஷனர் அலுவலகத்தில், நடிகை வைஷு லிசா அளித்த புகார் மனு:
நான், 15 ஆண்டுகளாக 'டிவி' நடிகையாக பணிபுரிந்து வருகிறேன். நானும், 'டிவி' நடிகர் நாஞ்சில் விஜயன் என்பவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை கொடுத்து, குடும்பம் நடத்தி வந்தார். மேலும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்தார்.
தற்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். எனவே, என்னை ஏமாற்றிய நாஞ்சில் விஜயன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகாரில் தெரிவித்துள்ளார்.