ADDED : ஏப் 22, 2025 12:35 AM
பூந்தமல்லி, ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ், 59. மதுரவாயல் தபால் நிலையத்தில், போஸ்ட்மேனாக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று, பூந்தமல்லியில் இருந்து தாம்பரம் செல்வதற்காக, மீஞ்சூர் - --வண்டலுார் வெளிவட்ட சாலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியே வந்த திருமூர்த்தி என்பவரது பைக்கில், லிப்ட் கேட்டு பயணித்தார். பைக் சில அடி துாரம் மட்டுமே சென்ற நிலையில், அந்த வழியே வேகமாக சென்ற டேங்கர் லாரி மோதியது.
இதில், லாரியின் அடியில் சிக்கிய மோகன்தாஸ், பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். பைக்கை ஓட்டிய திருமூர்த்தி, லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லாரி ஓட்டுநர் ஞானமணி, 40, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.