/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் வாரிய பணியால் குண்டும் குழியுமான சாலை
/
குடிநீர் வாரிய பணியால் குண்டும் குழியுமான சாலை
ADDED : அக் 14, 2024 03:33 AM

எம்.ஜி.ஆர்., நகர்:குடிநீர் வாரிய பணிகளால் எம்.ஜி.ஆர்., நகர் மார்க்கெட் சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளது. கோடம்பாக்கம் மண்டலம், எமி.ஜி.ஆர்., நகர் கே.கே.நகர் செல்லும் சாலையில், எம்.ஜி.ஆர்., நகர் மார்க்கெட் மற்றும் அரசு பள்ளி அமைந்துள்ளது.
இச்சாலை வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வானங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் குடிநீர் வாரியம் சார்பில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்தன. பின், பள்ளங்கள் மூடப்பட்டன.
ஆனால், சமீபத்தில் பெய்த மழையால், குடிநீர் வாரியம் தோண்டிய இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு, குண்டும் குழியுமாக மாறியுள்ளது. அத்துடன், தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் நிலை உள்ளது.
மழைக்காலம் வர உள்ளதால், தண்ணீர் தேங்கி விபத்துகள் ஏற்படும் முன் சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.