/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடசென்னையில் மின் உற்பத்தி நிறுத்தம்
/
வடசென்னையில் மின் உற்பத்தி நிறுத்தம்
ADDED : ஜன 24, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
சென்னையை அடுத்த அத்திப்பட்டு, மின் வாரியத்திற்கு, வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த மின் நிலையத்தின் மூன்றாவது அலகில், ஆண்டு பராமரிப்பு பணிக்காக, நேற்று முதல் ஒரு மாதத்திற்கு, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

