/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டியில் மின் கம்பி அறுந்து விபத்து தாம்பரம் - கடற்கரை ரயில் சேவை பாதிப்பு
/
கிண்டியில் மின் கம்பி அறுந்து விபத்து தாம்பரம் - கடற்கரை ரயில் சேவை பாதிப்பு
கிண்டியில் மின் கம்பி அறுந்து விபத்து தாம்பரம் - கடற்கரை ரயில் சேவை பாதிப்பு
கிண்டியில் மின் கம்பி அறுந்து விபத்து தாம்பரம் - கடற்கரை ரயில் சேவை பாதிப்பு
ADDED : ஆக 26, 2025 12:23 AM

சென்னை, கிண்டி - சைதாப்பேட்டை இடையே, மின் விநியோக உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால், தாம்பரம் - கடற்கரை தடத்தில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, மின்சார ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது.
மழை காலம் வரவுள்ளதால், சென்னை கடற்கரை, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வழித்தடத்தில், ரயில் பாதைகளை ஓட்டியுள்ள மரக்கிளைகள் வெட்டுவது, கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள், கடந்த ஒரு வாரமாக நடந்து வருகின்றன.
கிண்டி - சைதாப்பேட்டை இடையே, நேற்று மரக்கிளைகள் வெட்டும் பணி நடந்தது. அப்போது, திடீரென மரக்கிளை ஒன்று அருகில் இருந்த உயர் அழுத்த மின் பாதையில் விழுந்தது. இதில், மின் கம்பி அறுந்து, மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதனால், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில்கள், ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. குறிப்பாக, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி புறப்பட்ட ரயில்கள், கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல் வரை வரிசையாக நிறுத்தப்பட்டன.
இதுகுறித்த தகவலின்படி அங்கு விரைந்து வந்த ரயில்வே பணியாளர்கள், உயர் அழுத்த மின் பாதையில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், நெடுநேரமாகியும் ரயில் புறப்படாததால், பயணியர் பலர் மின்சார ரயிலில் இருந்து இறங்கி, அருகில் உள்ள பரங்கிமலை, கிண்டி உள்ளிட்ட மெட்ரோ நிலையங்களுக்கு சென்றனர். சிலர், ஆட்டோக்களிலும், மாநகர பேருந்துகளிலும் பயணம் செய்தனர்.
ஒரு மணி நேரம் போராடி, உயர் அழுத்த மின் பாதையில் ஏற்பட்ட பழுதை, ஊழியர்கள் சரி செய்த பின், மின்சார ரயில் சேவை சீரானது. ஒரு மணி நேரம் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், பயணியர் கடுமையாக அவதிப்பட்டனர்.

