/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி, வேளச்சேரியில் 11 மணி நேரம் மின்தடை
/
கிண்டி, வேளச்சேரியில் 11 மணி நேரம் மின்தடை
ADDED : ஏப் 23, 2025 12:46 AM
கிண்டிகிண்டி, டி.என்.எச்.பி., காலனி, மடுவாங்கரை, வண்டிக்காரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணி முதல் நேற்று காலை 9:30 மணி வரை, அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டது.
அதேபோல், வேளச்சேரி, தரமணியின் சில பகுதிகளிலும் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது.
இதனால், புழுக்கத்தில் துாக்கம் இல்லாமல் தவித்த அப்பகுதிவாசிகள், கொசு தொல்லையால் மிகவும் சிரமப்பட்டனர்.
கிண்டி, வேளச்சேரி மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால், அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை.
கேபிள் பழுது ஏற்பட்டால், மாற்று வழிகளில் மின்வினியோகம் வழங்கவும், கேபிளை உடனுக்குடன் சரி செய்யவும் போதிய தொழில்நுட்பம் இருந்தும், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பகுதிவாசிகள் குற்றம்சாட்டினர்.
கோடை வெப்பம் சுட்டெரிப்பதால், சீரான மின் வினியோகம் வழங்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தினர்.