ADDED : அக் 31, 2026 08:39 PM
அ நிறம் | அளவு
சென்னை: வல்லுார் அனல் மின் நிலையத்தில், கொதிகலன் குழாய் பழுதால், 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், வல்லுாரில் தேசிய அனல் மின் கழகம், தமிழக மின் வாரியத்துடன் இணைந்து, அனல் மின் நிலையத்தை அமைத்துள்ளது.
இங்கு தலா, 500 மெகாவாட் திறனில், மூன்று அலகுகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
முதல் அலகில் ‘பாய்லர் டியூப் பஞ்சர்’ காரணமாக இன்று (அக்.,31) அதிகாலை, 3:30 மணி முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுதை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
