/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு பாராட்டு
/
கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு பாராட்டு
ADDED : அக் 29, 2025 02:05 AM

சென்னை: ஆசிய அளவிலான ஜூனியர் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியின் துணை கேப்டன் கார்த்திகாவுக்கு, 1 லட்சம் ரூபாய் வழங்கி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.
பஹ்ரைன் நாட்டில் நடந்த ஆசிய ஜூனியர் கபடி போட்டியில், இந்திய அணி தங்கம் வென்றது.
இப்போட்டியில் விளையாடிய இந்திய கபடி அணியின் துணை கேப்டனான, சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழக அரசு சார்பில், அவருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்த கார்த்திகாவுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ௧ லட்சம் ரூபாய்க்கான காசோலை, பூங்கொத்து அளித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது, கார்த்திகாவின் பயிற்சியாளர் ராஜ், கபடி வீராங்கனை காவ்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்நிலையில், ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்வில், கார்த்திகாவை பாராட்டிய மேயர் பிரியா, மாநகராட்சி சார்பில் 5 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினார்.

