/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போரூரில் 6.5 ஏக்கரில் ஐ.டி., பூங்கா அமைக்கிறது 'பிரஸ்டீஜ்' குழுமம்
/
போரூரில் 6.5 ஏக்கரில் ஐ.டி., பூங்கா அமைக்கிறது 'பிரஸ்டீஜ்' குழுமம்
போரூரில் 6.5 ஏக்கரில் ஐ.டி., பூங்கா அமைக்கிறது 'பிரஸ்டீஜ்' குழுமம்
போரூரில் 6.5 ஏக்கரில் ஐ.டி., பூங்கா அமைக்கிறது 'பிரஸ்டீஜ்' குழுமம்
ADDED : டிச 26, 2024 12:28 AM

சென்னை, சென்னை போரூரில்,பிரஸ்டீஜ் குழுமம் சார்பில், 6.5 ஏக்கர் நிலத்தில், தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டப்பட உள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
பிரஸ்டீஜ் குழுமம் சார்பில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன், அண்ணா சாலையில் பல்வேறு இடங்களில், அடுக்குமாடி அலுவலக வளாகங்களையும் கட்டியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, போரூரில், மவுன்ட் - பூந்தமல்லி சாலையில், ஐ.டி., பூங்கா கட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இங்கு, 6.5 ஏக்கரில், 16.9 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த ஐ.டி., பூங்கா அமைய உள்ளது.
பிரஸ்டீஜ் மற்றும் டபிள்யு.எஸ்.ஐ.பால்கன்நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இங்கு, அடித்தளம், தரை தளத்துடன் ஒன்பது தளங்கள் கொண்டதாக இந்த வளாகம் அமைய உள்ளது. இங்கு, 13,000 பேர் பணி புரியும் அளவுக்கு இடவசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி, பிரஸ்டீஜ் குழுமம் விண்ணப்பித்து உள்ளது.
இந்த விண்ணப்பம், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய ஆய்வில் உள்ளதாக கட்டுமான துறையினர் தெரிவித்தனர்.

