/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
45 கிராம் தங்கம் சுருட்டிய ஆசாரி கைது
/
45 கிராம் தங்கம் சுருட்டிய ஆசாரி கைது
ADDED : ஜன 11, 2025 12:22 AM
கொளத்துார் கொளத்துார், அனுசுயா நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் அஸ்வின், 35. இவர் வீட்டருகே, தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இங்கு, பெரவள்ளூரை சேர்ந்த எத்திராஜ், 70 என்பவர் மேலாளராக உள்ளார். கேரளாவை சேர்ந்த பொற்கொல்லர் ராபின், 43, பட்டறையில் தங்கி, 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இவர் செய்யும் தங்க நகைகளில், அதிகமான பித்தளை கலந்து, நிறுவனத்திற்கு கொடுத்து வந்துள்ளார்.
இதை கண்டறிந்த எத்திராஜ், நிறுவன முதலாளியிடமும், ராஜமங்கலம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், நிறுவனத்தில் மோசடி செய்து சேர்த்த தங்கத்தை கொளத்துார், மக்காராம் தோட்டத்தில் உள்ள பிரியதர்ஷினி நகை கடையில், தன்னுடைய நகை எனக்கூறி, 45 கிராம் தங்க செயினை விற்று பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, ராபினை போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.