/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியிடம் அத்துமீறல் பூஜாரிக்கு '10 ஆண்டு'
/
சிறுமியிடம் அத்துமீறல் பூஜாரிக்கு '10 ஆண்டு'
ADDED : மார் 04, 2026 06:10 AM

எண்ணுார்: எண்ணுாரில் 5 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
எண்ணுாரைச் சேர்ந்தவர் ராஜன், 70; கோவில் பூஜாரி. இவர், கடந்த 2025 ஜன., 5ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை, கோவில் கருவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதுகுறித்து விசாரித்த எண்ணுார் மகளிர் போலீசார், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில் புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், அரசு வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜரானார்.
நேற்று நடந்த விசாரணையில், ராஜனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், அரசு சார்பில், 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உமாமகேஸ்வரி தீர்ப்பளித்தார்.

