/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பீர்க்கன்காரணை ஏரிக்கரை நிறுத்தத்தில் 'யு - டர்ன்' மூடல்
/
பீர்க்கன்காரணை ஏரிக்கரை நிறுத்தத்தில் 'யு - டர்ன்' மூடல்
பீர்க்கன்காரணை ஏரிக்கரை நிறுத்தத்தில் 'யு - டர்ன்' மூடல்
பீர்க்கன்காரணை ஏரிக்கரை நிறுத்தத்தில் 'யு - டர்ன்' மூடல்
ADDED : மார் 04, 2026 06:11 AM

பெருங்களத்துார்: இரும்புலியூரில், சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வந்ததை அடுத்து, ஏரிக்கரை நிறுத்தத்தில் இருந்த 'யு - டர்ன்' மூடப்பட்டு, பாதசாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை ஏரியை ஒட்டி, பழைய ஜி.எஸ்.டி., சாலை வழியாக வரும் வாகனங்கள், வேல் மற்றும் தேவனேச நகர்களில் இருந்து வருவோர், இரும்புலியூர் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடந்தனர்.
வண்டலுார் மார்க்கமாக இருந்து வருவோரும், நெடுங்குன்றம், சதானந்தபுரம், வேல் நகர், தேவனேச நகர்களுக்கு செல்ல, அந்த இடத்தில் 'யு - டர்ன்' எடுத்தனர். இதனால், ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதற்கு தீர்வாக, வாகனங்கள் 'யு - டர்ன்' எடுத்து செல்ல, 'ப்ரீகாஸ்ட் 'ரெடிமேட் சிமென்ட் பெட்டி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதையடுத்து, அங்கிருந்த 'யு - டர்ன்' மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாதசாரிகள் மட்டும் வழக்கம் போல் சாலையை கடக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

