ADDED : ஜூன் 03, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி, வேளச்சேரி சேர்ந்த 24 வயது பெண், கிண்டியில் உள்ள பியூட்டி பார்லரில் பணிபுரிகிறார். கடந்த 1ம் தேதி இரவு பணி முடித்து, பேருந்தில் இருந்து இறங்கி வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
வேளச்சேரி, திரவுபதி அம்மன் கோவில் தெரு அருகில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த நபர், பெண்ணின் உடம்பை தொட்டு பாலியல் சீண்டல் செய்தார்.
இதுகுறித்த புகாரில், வேளச்சேரி போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்ததில், வேளச்சேரி, வீர வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்த வினோத், 33, சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
நேற்று, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.