/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரீதம் கார்த்திக், அபினேஷ் ஜோடி பிரைம் டென்னிசில் முதலிடம்
/
பிரீதம் கார்த்திக், அபினேஷ் ஜோடி பிரைம் டென்னிசில் முதலிடம்
பிரீதம் கார்த்திக், அபினேஷ் ஜோடி பிரைம் டென்னிசில் முதலிடம்
பிரீதம் கார்த்திக், அபினேஷ் ஜோடி பிரைம் டென்னிசில் முதலிடம்
ADDED : மார் 18, 2025 12:37 AM

சென்னை, பிரைம் டென்னிஸ் அகாடமி மற்றும் டென்னிஸ் பிரீமியர் லீக் அமைப்பு இணைந்து, டென்னிஸ் போட்டியை, கீழ்ப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடத்தின.
ஆண்களுக்கான இரட்டையர், ஒற்றையர் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
இதில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் இருந்து, 50க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவிற்கான இறுதி போட்டியில், கல்பாக்கம் ஜோவன் தன்ராஜ், 1 - 4, 4 - 1, 1 - 0 என்ற கணக்கில், சென்னை துருன் பிரமோத்தை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், சென்னை பிரீதம் கார்த்திக் மற்றும் அபினேஷ் ஜோடி, 6 - 1 என்ற கணக்கில், ஜோவன் தன்ராஜ் மற்றும் ரிட்ச்வின் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பெண்கள் ஒற்றையருக்கான ஆட்டத்தில், மிருதுளா பழனிவேல், 4 - 0, 4 - 0 என்ற கணக்கில், கவுனவி கவுதமனை தோற்கடித்து வெற்றி பெற்றார்.