/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரியில் விதிமீறி கட்டிய தனியார் மருத்துவமனைக்கு 'சீல்'
/
வேளச்சேரியில் விதிமீறி கட்டிய தனியார் மருத்துவமனைக்கு 'சீல்'
வேளச்சேரியில் விதிமீறி கட்டிய தனியார் மருத்துவமனைக்கு 'சீல்'
வேளச்சேரியில் விதிமீறி கட்டிய தனியார் மருத்துவமனைக்கு 'சீல்'
ADDED : ஆக 20, 2025 03:05 AM

சென்னை, வேளச்சேரியில், மாநகராட்சி அனுமதி பெறாமல், விதிமீறி கட்டிய வி.ஆர்.எஸ்.ஐ., என்ற தனியார் மருத்துவமனைக்கு, நேற்று அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
அடையாறு மண்டலம், 177வது வார்டு, முத்துகிருஷ்ணன் தெருவில், 2021ல் வி.ஆர்.எஸ்.ஐ., என்ற தனியார் மருத்துவமனை, மாநகராட்சியின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டது.
மொத்தம், 14,500 சதுர அடி பரப்பில், வேளச்சேரி மற்றும் சோழிங்க நல்லுார் தாலுகா எல்லையில் கட்டப்பட்டு உள்ளது. இதில், சோழிங்கநல்லுார் தாலுகாவில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டியதால், கட்டட அனுமதி பெறவில்லை.
இது தொடர்பாக, நீர்நிலையை மீட்கும் வகையில், வருவாய்த்துறை சார்பில் மருத்துவமனைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதேபோல், கட்டட அனுமதி பெறாததால், நகர்ப்புற மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் படி, 2022 மே 27ம் தேதி, மாநகராட்சியும் நோட்டீஸ் வழங்கியது.
இதன் தொடர் நடவடிக்கையாக, நேற்று, போலீஸ் பாதுகாப்புடன் சென்ற மாநகராட்சி அதிகாரிகள், இந்த மருத்துவமனைக்கு, 'சீல்' வைத்தனர்.