/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் மினி பஸ் வழித்தடம் பட்டியல் வெளியீடு
/
தனியார் மினி பஸ் வழித்தடம் பட்டியல் வெளியீடு
ADDED : மார் 25, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில், மே 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள 72 தனியார் மினிபஸ் வழித்தடத்திற்கு, 406 பேர் விண்ணப்பித்தனர்.
இந்த விண்ணப்பங்கள், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலையில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.
இதில் தேர்வானவர்களுக்கு, 6ம் தேதி முதல், மூன்று கட்டங்களாக அனுமதி ஆணை வழங்கப்பட்டது. மொத்தம் 72 வழித்தடங்களில், தலா இரண்டு பஸ்கள் வீதம் இயக்கப்பட உள்ளன.
இதன்படி, மொத்தம் 103 அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் வட சென்னையில் இயக்கப்பட உள்ள மினி பஸ் வழித்தட விபரங்கள், கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.