/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஹேக்கத்தான்' போட்டியில் வென்ற மாணவ - மாணவியருக்கு பரிசளிப்பு
/
'ஹேக்கத்தான்' போட்டியில் வென்ற மாணவ - மாணவியருக்கு பரிசளிப்பு
'ஹேக்கத்தான்' போட்டியில் வென்ற மாணவ - மாணவியருக்கு பரிசளிப்பு
'ஹேக்கத்தான்' போட்டியில் வென்ற மாணவ - மாணவியருக்கு பரிசளிப்பு
ADDED : ஆக 29, 2025 10:27 PM
சென்னை, ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரியில் நடத்தப்பட்ட 'ஹேக்கத்தான்' போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் உள்ள, ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரியில், இம்மாதம் 25ம் தேதி 'ஜூனியர் ஹேக்கத்தான் - 2025' நிகழ்ச்சி நடந்தது.
ஆர்.எம்.கே., பொறியியல் கல்வி குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர், வித்யாரத்னா ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், பள்ளி மாணவ - மாணவியருக்கு மறுசுழற்சி மற்றும் நிலையான ஆற்றல், வேளாண்மை, சுகாதாரம், கல்வி, ரோபோக்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடு, 'ஸ்மார்ட்' வாகனங்கள், இந்திய மரபின் பாரம்பரிய விளையாட்டுகள் உட்பட 12 தலைப்புகளில், போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த 65 பள்ளிகளில் இருந்து பங்கேற்ற 846 மாணவ - மாணவியர், 241 அணிகளாக பிரிக்கப்பட்டனர்.
இந்த அணியினர், தாங்கள் கண்டறிந்த அறிவியல் உள்ளிட்ட மாதிரி படைப்புகளை காட்சிப்படுத்தி, டி.சி.எஸ்., உட்பட முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்களிடம் விவரித்தனர்.
இப்போட்டியில், முதல் மூன்று இடங்களை பிடித்த, மாணவ - மாணவியருக்கு, ஆர்.எம்.கே., பொறியியல் கல்வி குழுமத்தின் துணை தலைவர் ஆர்.எம்.கிஷோர் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில், கல்வி குழும செயலர் ஆர்.ஜோதி நாயுடு, ஆலோசகர் யாலமஞ்சி பிரதீப், ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரி முதல்வர் முகமது ஜூனைத், ஆர்.எம்.கே., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் முதல்வர் என்.சுரேஷ்குமார், ஆர்.எம்.டி., பொறியியல் கல்லுாரி முதல்வர் அன்புசெழியன் ஆகியோர் பங்கேற்றனர்.