தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி எம்.டி.சி., அறிவிப்பு

உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி எம்.டி.சி., அறிவிப்பு

உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி எம்.டி.சி., அறிவிப்பு


ADDED : ஆக 20, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மாநகர போக்குவரத்து கழகத்தில், உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி பெற ஐ.டி.ஐ., மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாநகர போக்குவரத்து கழகமான எம்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில், ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி பெற ஐ.டி.ஐ.,யில் மெக்கானிக்கல் மோட்டார், எலக்ட்ரீஷியன், பிட்டர், வெல்டர், பெயின்டர் உள்ளிட்ட பிரிவுகளில் படித்து, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பங்கேற்க விரும்புவோர், செப்., 2ம் தேதி காலை 10:00 மணிக்கு, குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி பள்ளியில் நடக்கும் சிறப்பு முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம். மாதம் 14,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us