/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேராசிரியர் சாமி தியாகராஜன் மறைவு
/
பேராசிரியர் சாமி தியாகராஜன் மறைவு
ADDED : ஜன 24, 2025 12:08 AM

சென்னை
தஞ்சாவூர் மாவட்டம், கரந்தட்டான்குடி கிராமத்தில் பிறந்தவர் சாமி தியாகராஜன், 85. கும்பகோணம் அரசு ஆடவர் கல்லுாரி உட்பட பல்வேறு இடங்களில், தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றி, 1998ல் ஓய்வு பெற்றார். பின், சைவ ஆதீனங்களுக்கு ஆலோசகராக இருந்தார்.
'திருவள்ளுவர் திருநாள் கழகம்' எனும் அமைப்பை மீட்டெடுத்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில், 'வைகாசி அனுஷம்' நிகழ்ச்சியை நடத்தி வந்தார். திருவள்ளுவர், வைகாசி அனுஷத்தில் தான் பிறந்தார் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவர் எழுதிய, 'பூவும் நாரும், திருக்குறள் உரை விபரீதம், சொன்னால் விரோதம் ஆயினும் சொல்கிறேன்' என்ற புத்தகங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. பல சைவ ஆகம புத்தகங்களை எழுதியுள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக இறந்தார். இறுதி சடங்கு நேற்று நடந்தது. அவரது உடலுக்கு, கவர்னர் ரவி அஞ்சலி செலுத்தினார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

