/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழை வெள்ளம் சூழும் இடத்தில் தரை தளம் கட்டுவதற்கு தடை?
/
மழை வெள்ளம் சூழும் இடத்தில் தரை தளம் கட்டுவதற்கு தடை?
மழை வெள்ளம் சூழும் இடத்தில் தரை தளம் கட்டுவதற்கு தடை?
மழை வெள்ளம் சூழும் இடத்தில் தரை தளம் கட்டுவதற்கு தடை?
ADDED : பிப் 22, 2024 12:30 AM

சென்னைவெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் தரைதள வீடுகள் கட்டுவதை தவிர்க்கும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை பரிசீலித்து வருகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் வெள்ளம் பாதித்த பகுதிகள் குறித்தும், எவ்வளவு உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்தது என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
அந்தந்த பகுதிகளிலுள்ள கட்டடங்களில் இதற்கான குறியீடு வரையப்பட்டதுடன், திட்ட அனுமதி அளிக்கும் துறைகளுக்கும் இந்த விபரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்காத வகையில், கட்டடங்களின் தரைமட்ட உயரத்தை அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் கட்டட அனுமதிக்கான விதிகளில், தேவையான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. வெள்ளம் வரும் போது, அடுக்குமாடி குடியிருப்புகளில் தரைதள வீடுகளில் வசிப்போர் தான், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில், தரைதள வீடுகள் கட்டுவதை தவிர்க்கும் வகையில், உரிய கட்டுப்பாடுகளை பிறப்பிக்க பரிசீலித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.