தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மீட்கப்பட்ட இடங்களில் திட்ட பணிகள் துவக்கம்

 மீட்கப்பட்ட இடங்களில் திட்ட பணிகள் துவக்கம்

 மீட்கப்பட்ட இடங்களில் திட்ட பணிகள் துவக்கம்


ADDED : மார் 04, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேளச்சேரி: வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில், ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்த, 75 சென்ட் இடங்களை மீட்டு, பூங்கா, மினிஹால் உள்ளிட்ட புதிய திட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

அடையாறு மண்டலம், 175வது வார்டு, அம்பேத்கர் நகரில், 1992ம் ஆண்டு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 2,500 வீடுகள் ஒதுக்கப்பட்டன.

இங்கு, 6 பிரதான சாலைகள், 25 குறுக்கு தெருக்கள் மற்றும் 200 சந்துகள் உள்ளன. இதில், 20க்கும் மேற்பட்ட தெருக்களில், பொது பயன்பாட்டுக்கு இடம் ஒதுக்கப்பட்டன.

சில தெருக்களில் உள்ள இடங்கள், பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்தன. பூங்கா, மைதானம், குழந்தைகள் மையம், சமூக நலக்கூடம் கேட்டு, பகுதி மக்கள் மாநகராட்சிக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, 6வது பிரதான சாலை, 3 மற்றும் 20வது குறுக்கு தெருக்களில், ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்த, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, 30 சென்ட் இடம் மீட்கப்பட்டது.

இதில், 2.25 கோடி ரூபாயில், பூங்காக்கள், மினிஹால் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகின்றன. மேலும், டி.என்.எச்.பி., காலனியில் ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்த, 45 சென்ட் இடத்தை மீட்டு, 5.20 கோடி ரூபாயில் பூங்கா அமைக்கப் படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us