/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அம்பத்துாரில் திட்ட பணிகள் துவக்கம்
/
அம்பத்துாரில் திட்ட பணிகள் துவக்கம்
ADDED : பிப் 14, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார், சென்னை, அம்பத்துார் மண்டலத்தில், 11.52 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் முடிவடைந்த திட்டங்களுக்கு, திறப்பு விழா மற்றும் 8.30 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, நேற்று காலை நடந்தது.
இதில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு, பணிகள் முடிவடைந்த திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை மேயர் பிரியா, அம்பத்துார் தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜோசப் சாமுவேல், மண்டல குழு தலைவர் மூர்த்தி, மத்திய வட்டார துணை ஆணையர் பிரவீன் குமார் உள்ளிட்டோர், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

