புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு அற்புதமானது: சுந்தர்பிச்சை மகிழ்ச்சி
புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு அற்புதமானது: சுந்தர்பிச்சை மகிழ்ச்சி
ADDED : நவ 19, 2025 10:24 PM

வாஷிங்டன்: '' அமெரிக்காவின் தொழில்நுட்ப திறனை வடிவமைத்ததில் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு அற்புதமானது,'' என கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் சிஇஓ சுந்தர்பிச்சை கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு எச்1பி விசாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இந்த விசாக்கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே அது பொருந்தும் என வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில் சுந்தர்பிச்சை அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: அமெரிக்க தொழில்நுட்ப வளர்ச்சியை பார்த்தால், புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு என்பது அற்புதமானது. இன்னும் திறமைசாலிகளை கொண்டு வரக்கூடிய கட்டமைப்பு கொண்டு வரப்படுவதாக நினைக்கிறேன். தற்போதைய திட்டங்களில் உள்ள சில குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மாற்றங்கள் செய்யப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

