sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிட்நத்தம் புறம்போக்கில் வசிப்போருக்கும் சொத்து வரி போர்க்கொடி! மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வற்புறுத்தல்

/

சிட்நத்தம் புறம்போக்கில் வசிப்போருக்கும் சொத்து வரி போர்க்கொடி! மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வற்புறுத்தல்

சிட்நத்தம் புறம்போக்கில் வசிப்போருக்கும் சொத்து வரி போர்க்கொடி! மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வற்புறுத்தல்

சிட்நத்தம் புறம்போக்கில் வசிப்போருக்கும் சொத்து வரி போர்க்கொடி! மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வற்புறுத்தல்


ADDED : ஆக 30, 2024 12:04 AM

Google News

ADDED : ஆக 30, 2024 12:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, 'சென்னை மாநகராட்சியில் நத்தம் புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மூன்று லட்சம் பேருக்கு சொத்து வரி வசூலிக்க வேண்டும்' என, கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறினார்.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.

கூட்டம் துவங்கியதும், கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு, இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், ம.தி.மு.க., கவுன்சிலர்களின் மாத அமர்வுபடியை, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படி, ம.தி.மு.க., கவுன்சிலர் சுப்பிரமணி கோரிக்கை வைத்தார்.

இதைத் தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

உமா ஆனந்த், பா.ஜ., கவுன்சிலர்: என்னுடைய வார்டு, அயோத்தியா மண்டபம் இருக்கும் சாலைக்கு, அத்வானி பெயர் வைக்க வேண்டும். அதேபோல், இந்திய முழுதும் சாலை அமைத்த வாஜ்பாய் பெயர், ஒரு சாலைக்கு வைக்க வேண்டும். கருணாநிதி பெயரில் நாணயம் வெளியிட்டது பெருமை.

ராஜன், வளசரவாக்கம் மண்டல குழு தலைவர்: கடந்த, 1980க்கு முன், கூவம் ஆற்றில் குளிக்கும் நிலை இருந்தது. தற்போது, சாக்கடை தான் ஓடுகிறது. கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி, தேம்ஸ் நதியை போல் மாற்றினால், வரலாற்றில் மேயர் இடம் பிடிப்பார்.

மேயர் பிரியா: கூவம் ஆற்றை, நீர்வளத்துறை பராமரிக்கிறது. அமெரிக்காவின் ஆலோசனை பெற்று, கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

விஸ்வநாதன், நிலைக்குழு தலைவர்: சென்னை மாநகரில் பத்திரம் பதிவு செய்யப்படாத வீடுகளுக்கு வரி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மூன்று லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நீர்நிலை அல்லாத பகுதிகளில் குடியிருப்போருக்கு சொத்து வரி வசூலிக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை கேள்வி எழுப்பியும் பதில் இல்லை. இது, பொதுமக்களின் மிக முக்கிய பிரச்னை.

தனசேகரன், நிலைக்குழு தலைவர்: தமிழக முதல்வர் துவங்கிய திட்டப்படி, 'ஆன்லைன்' பட்டா வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கூட வரி வசூல் செய்ய முடியாத நிலை உள்ளது.

கடந்த காலங்களில், நீர்நிலைகள் அல்லாத பகுதிகளில் வரி வசூல் செய்யலாம் என்ற நிலை இருந்தது. என் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான, 10,000 குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களுக்கு வீட்டு வரி வசூலிக்கப்படவில்லை.

மகேஷ்குமார், மாநகராட்சி துணை மேயர்: நீர்நிலை இல்லாத பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புகளுக்கு தான், வரி வசூல் கேட்கின்றனர். அப்படி கொடுத்தால், அவர்களுக்கு மின் இணைப்பு கிடைக்கும். பல உறுப்பினர்களின் கோரிக்கை அதுவாக தான் உள்ளது.

அதுகுறித்து மேயரும், கமிஷனரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்த போது, தி.மு.க., கவுன்சிலர்கள் பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, மேயர் பிரியா தலையிட்டு கண்டித்தார்.

குமரகுருபரன், மாநகராட்சி கமிஷனர்: ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில், தற்போது ஒன்றும் செய்ய முடியாது. அது, அரசின் கொள்கை முடிவு. தமிழக அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே, சொத்து வரி வசூலிக்க முடியும்.

எனவே, அரசு புறம்போக்கு நிலங்களில், வரி வசூல் செய்ய முடியாது. அதேநேரம், மாநகராட்சி நிலமாக இருந்தால், அரசிடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை. கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கை, அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

வெளிநடப்பு


குப்பை கையாளும் பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுவதற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி., உள்ளிட்ட, தி.மு.க., கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

குப்பை கையாளும் பணியை தனியாரிடம் விட்டாலும், துாய்மை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்கப்படும் என, மேயர் பிரியா கூறினார். இதை ஏற்க மறுத்து, அக்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

கொளத்துார் தாலுகாவுக்கு அலுவலக இடம் ஒதுக்கீடு

மாநகராட்சி கூட்டத்தில், 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சில முக்கிய தீர்மானங்கள்:

1 மாநகராட்சியின், 289 குப்பை அகற்றும் வாகனங்களில், 1.31 கோடி ரூபாய் மதிப்பில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி, ஜி.ஆர்.எஸ்., தொழில்நுட்பத்தில், மூன்று ஆண்டுகளுக்கு கண்காணிக்க அனுமதிக்கப்படுகிறது. தண்டையார்பேட்டை, அண்ணா நகர் மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணி, தனியாருக்கு வழங்க அனுமதிக்கப்படுகிறது. ஏற்கனவே, தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணிக்கு நான்கு ஆண்டுகளுக்கு, 19.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

2 சென்னையில் 9.45 கோடி ரூபாய் செலவில் ஆண்டுக்கு, 50,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு திட்டத்திற்கு அனுமதி தரப்படுகிறது. சென்னை முழுதும், 65 எண்ணிக்கையிலான வாகனங்களில், கொசு மருந்து அடிக்க 2.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

3 மாநகரில் 81 இடங்களில், 8.46 கோடி ரூபாய் செலவில், நிழற்குடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் 176 கோடி ரூபாயில் பாலம் கட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட மதிப்பு, 195 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மெட்ரோ ரயில் பணி வரை, இத்திட்டத்தை நிறுத்தி வைக்க அனுமதிக்கப்படுகிறது.

4 தண்டையார்பேட்டை, ராயபுரம், தேனாம்பேட்டை, ஆலந்துார் ஆகிய மண்டலங்களில், 16 இடங்களில், 26.60 கோடி ரூபாய் மதிப்பில் நடைபயிற்சி பாதைகள் அமைக்கப்பட உள்ளது. பெரம்பூர் முரசொலிமாறன் பூங்காவில் அறிவியல் பூங்கா, 5.75 கோடி ரூபாயில் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. அண்ணா நகர் கிழக்கு 2வது முதன்மை சாலைக்கு, தமிழறிஞர் அவ்வை நடராஜன் முதன்மை என, பெயர் சூட்ட அனுமதிக்கப்படுகிறது.

5 கொளத்துார் புதிய தாலுகாவாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தாலுகா அலுவலகம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டடத்தில் இரண்டு ஆண்டுகள் வாடகை அடிப்படையில் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us