/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம்: இருவருக்கு 'காப்பு'
/
மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம்: இருவருக்கு 'காப்பு'
மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம்: இருவருக்கு 'காப்பு'
மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம்: இருவருக்கு 'காப்பு'
ADDED : பிப் 09, 2024 12:44 AM
டி.பி., சத்திரம்,டி.பி., சத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான ஆயுர்வேத 'மசாஜ் சென்டர்' செயல்படுகிறது.
இங்கு, 'லோகேன்டோ' மொபைல் செயலி வாயிலாக வாடிக்கையாளர்களை அழைத்து, விபசாரம் நடப்பதாக, கிழக்கு மண்டல இணை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இணை கமிஷனரின் தனிப்படையினர், நேற்று மாலை 4:50 மணிக்கு, செயலி வாயிலாக வாடிக்கையாளர்களை போல் அந்த சென்டரில் நுழைந்தனர்.
அங்கு நடத்தப்பட்ட திடீர் சோதனையில், மசாஜ் சென்டர் பெயரில் இரு ஆண்கள் மற்றும் மூன்று பெண்களை வைத்து, விபசாரம் நடத்தியது உறுதியானது.
இதையடுத்து, அங்கிருந்த மூன்று பெண்களை மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதில் தொடர்புள்ள கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து, டி.பி., சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், மசாஜ் சென்டர் உரிமையாளரான கேரளாவைச் சேர்ந்த ஷியாம் என்பவர், உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக மசாஜ் சென்டர் நடத்தி வந்தது தெரிந்தது.
தலைமறைவான ஷியாமை போலீசார் தேடி வருகின்றனர்.

