/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளைஞரிடம் வழிப்பறி வாலிபருக்கு 'காப்பு'
/
இளைஞரிடம் வழிப்பறி வாலிபருக்கு 'காப்பு'
ADDED : டிச 15, 2024 08:27 PM
புளியந்தோப்பு:புளியந்தோப்பு, திரு.வி.க., நகரைச் சேர்ந்தவர் ரகு, 19; மாடு தொட்டியில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, புதுபாலம் அருகே நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த நபர் ரகுவை கத்தியை காட்டி மிரட்டி, வாட்ச், 1,600 ரூபாய் ஆகியவற்றை பறித்து தப்பினார்.
இது குறித்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார், நரசிம்மா நகர் முதல் தெருவைச் சேர்ந்த சின்ன அப்பு என்கிற பிரதீப், 26, கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
கஞ்சா விற்றவர் கைது
ஒடிசாவைச் சேர்ந்தவர் ரவி, 34. இவர், கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்வதாக, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனரின் தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. அரும்பாக்கத்தில் வைத்து ரவியை கைது செய்து, 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் கஞ்சா வாங்கி விற்பனையில் ஈடுபட்ட, புரசைவாக்கத்தைச் சேர்ந்த நாகவள்ளி, 36, அவரது கணவர் சேகர், 41, ஆகியோரையும், தலைமைச் செயலக காலனி போலீசார் கைது செய்தனர்.

